Monday, August 27, 2018

KERALA BEWARE OF UNDER SEA MINING LICENCE GIVEN BY INTERNATIONAL SEA BED AUTHORITY TO CHINA

கேரள  மாநில ஆளுநராக எம்.ஓ.எச்.பரூக் மரைக்காயர்  இருந்த சமயம் நான்  திருவனந்தபுரம் சென்றேன். எப்போதுமே என் பயணங்களில் பொது நன்மைக்காக எதையாவது செய்வது என் வழக்கம். கேரளா முதல்வரிடம் ஐக்கிய நாடுகள் மன்ற சர்வதேச கடல்மடி ஆணையம் அரபிக்கடலும் இந்துமாக்கடலும் சந்திக்கும்  இடத்தில் கடலடியில் கனிமம் தோண்ட சீனாவுக்கு உரிமம் கொடுத்து இருந்தது.தென்னிந்தியாவைச் சுற்றி கடலுக்கடியில் எரிமலைச் சங்கிலி உள்ள இடத்தில் சீன சுரங்கம் அமைந்தால் கேரளாவுக்கு ஆபத்து என்றும் கேரளா இதை பற்றி கண்காணிக்க வேண்டும் என்ற மனுவை முதலமைச்சர் ஓமன்  சாண்டியிடம்  கொடுக்க எடுத்துச் சென்றேன். ஆளுநர் மாளிகையில் என்னை தங்க வைக்காமல் அரசினை விருந்தினர் விடுதியில் தங்க வைத்தாரே என்று நண்பர் பரூக் மரைக்காயர் மீது கோபம். முதல்வரிடம் மனு கொடுத்து விட்டு திருவனந்தபுரம் செய்தியாளரை சந்தித்தேன்.  அதை பற்றிய   நமது மனசாட்சி பதிவு இங்கே.செய்தியாளர் அரங்கம் நிரம்பி வழிந்தது.மேடையில் என்னோடு காரைக்கால் வளவன் இருந்தார். எல்லாம் முடிந்தது . பரூக் மரைக்காயர்  மீதான கோபத்தில் ஆளுநர் மாளிகைக்கு  அவரைச்  சந்திக்காமல் அன்று மாலை அனந்தபுரி  ரயிலில் விழுப்புரம்-புதுவைக்கு திரும்பினேன். நண்பர்களுக்குள் ஊடல் ...... நட்பில் இதெல்லாம்  நிகழ்வது தான்.




No comments:

AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...