உயிரோடு உலகின் பல நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் 1977 முதல் ஈழத் தமிழரும் கோழைத் தமிழரும் என்ற கட்டுரையை கலைஞர் அவர்களை ஆசிரியராகக் கொண்ட கழகத்தின் அதிகாரப்பூர்வ கிழமை ஏடு நம்நாடு தொடங்கி இன்றளவும் விடாமல் உழைக்கும் எனக்கு 2006 ல் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அளித்த பாமாலையே போதும் முடிவு கட்டி விட்டார்கள்.
1978 முதல் 1994 வரை தொழில் வயின் பிரிவு காரணமாக நான் புதுவையில் திங்களுக்கு ஒரு முறை வந்து சென்றவன் என்பதால் பிரபாகரனோடு நேரில் பழக்கம் இல்லாதவன். எனவே உலகின் எந்த நாட்டில் நடந்த எந்த மாநாட்டுக்கும் அழைக்கவில்லை. பேராசிரியர் தீரன் போன்றவர்கள் , சினிமா நடிக நடிகையர் , ஆங்கிலத்தில் எந்தச் சபையிலும் ஒரு எழுதி வைத்துக் கூட படிக்கச் முடியாதவர்கள் , இவர்களை அழைத்தார்கள். வந்த அழைப்புக்கே விசா வராமல் தடுத்தவர்கள் , தொலை பேசியில் ஆகா ஓகோ புகழ்வதும் என்னை உலக நாட்டுக்கு விளம்பரம் இல்லாமல் சென்று ஈழத்து தமிழர்கள் வாழும் சேரிகளில் தங்கி அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களை , நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தமிழர் நிலை பற்றிச் சொல்லிட வாதிட முட்டுக் கட்டை போட்டவர்கள் , இந்தியாவின் பிற மாநிலங்களில் நகரில் கண் திறப்புக் கருத்தரங்கு நடத்த ஒருவர் மட்டுமே 100 யூரோ அனுப்பி , வேறு எவரும் நிதி தர முடியாமல் , கருத்தரங்கு நடக்காமல் தடுத்தவர்கள் சிங்களவர் அல்ல. தமிழ்நாட்டுத் தமிழரே..
என் யோசனைப்படி உருவான புலம் பெயர்ந்த தமிழீழ அரசில் கவுரவ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஊர் உலகு அறியாதோரை இந்தியாவில் நியமித்தவர்கள் அறியவே பழைய பதிவுகள் இங்கு பதிவாகின்றன.
என் பணி இறந்த பிறகு சொர்க்க லோகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் நடுவில் ஆவியுலகில் நீதி கேட்டுப் போராடவே ........
என் எதிர்கால லட்சியம் இதுவே.
No comments:
Post a Comment