1977 பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக .கழகத் தலைவர் கலைஞர் தென் ஆற்காடு மாவட்டச் சுற்றுப்பயணம். அவர் கூட்டத்துக்கு வந்து சேர தாமதமாகும் வழி நெடுக வரவேற்பு கூட்டங்கள் என்று இருக்கும். அவர் வரும் வரை மணி நேரம் கூட பேசி கூட்டம் கலையாமல் பார்த்துக்கொள்ள என்னைப் போன்றவர்களை அழைப்பார்கள். அப்படி நெல்லிக்குப்பம் கே.ஆர்.சபாபதி மேல்பட்டாம்பாக்கத்தில் பேச அழைத்தார். புதுவை 15 வட்ட தி.மு.கழகக் கிளையில் இருந்த தாவீது ஒரு இசைக் கலைஞர். அவருக்காக குருட்டறிவை வீழ்த்திக் ஏற்றி ..... என்று ஒரு இசை நிகழ்ச்சி எழுதித் தந்து இருந்தேன். கே.ஆர்.சபாபதி அழைப்பை ஏற்று கலைஞர் பேச இருந்த மேல்பட்டாம்பாக்கம் கூட்டத்துக்குப் பேச பேருந்தில் சென்றேன். பேருந்தில் இறங்கினால் எல்லா சுவர்களிலும் கலைஞர் பேசுகிறார் என்று பெரிய அளவில் விளம்பரமும் புதுவை நந்திவர்மன் கலை நிகழ்ச்சி நடை பெறும் என்ற விளம்பரம் கண்டு ஐயோ எனக்குப் பாடவே தெரியாதே , இது என்ன சோதனை என்று அடுத்த பேருந்தில் ஏறி கடலூர் மஞ்சை நகர் மைதானத்துக்கு வந்து விட்டேன். மேல்பட்டாம்பாக்கத்தில் பேசிவிட்டு தலைவர் கலைஞர் மஞ்சை நகர் மைதானம் வந்தார். என்னை பார்த்ததும் என்னையா இசை நிகழ்ச்சி என்று போட்டுவிட்டு இங்கு ஓடி வந்து விட்டாய் என்று கேட்டார். கே.ஆர்.சபாபதி தப்பாக விளம்பரம் செய்து விட்டார் என்று சொல்லிவிட்டு , கலைஞர் பேசி சென்ற பிறகு சீதாராம் லாட்ஜில் அரை போட்டு ஒரே இரவில் ஒரு நடிகனின் கடைசி நாடகம் என்று எழுதி முடித்தேன். மஞ்சை நகர் மைதானம் பாபு கோவிந்தராஜன் கலையரங்கில் தா.கடவுள் எம்.ஜி .ஆராகவும் நான் வழக்கறிஞர் சாந்தி பூஷணாகவும் நடித்த நாடகம் அரங்கேறியது. 8 ஊர்களில் நாடகம் நடந்தது.ஒரு நடிகனின் கடைசி நாடகம் 21 காட்சிகள் கொண்டது. சௌ.பத்மநாபன் கலைஞராகவும் விழுப்புரம் புலவர் கந்தக் கண்ணன் பேராசிரியர் ஆகவும் நடித்தனர்
அந்த தேர்தலில் வட சென்னையில் இருந்து ஏ.வி.பி .ஆசைத்தம்பி மட்டும் வென்றார்.
எல்லா தொகுதியிலும் தி.மு.கழகம் தோற்ற அந்த தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டிலியே முதல் தேர்தல் நன்றி அறிவிப்புக்கூட்டம் கடலூர் நகர தி.மு.கழகம் சார்பில் நந்திவர்மன் தலைமையில் நடந்தது.
நன்னிலம் நடராசன் சிறப்புரை. கூட்ட ஏற்பாடு நகரச் செயலாளர் கி.கோவிந்தராஜன் [ கி.வீரமணி அவர்களின் அண்ணன் ]
TEN YEARS BEFORE IN NEYVELI N.NANDHIVARMAN HAD SPOKEN IN SAME STAGE WITH A.V.P.ASAITHAMBI.
அந்த தேர்தலில் வட சென்னையில் இருந்து ஏ.வி.பி .ஆசைத்தம்பி மட்டும் வென்றார்.
A. V. P. Asaithambi (died 7 April 1979) was an Indian politician.[1] He was elected to the Tamil Nadu Legislative Assembly in 1957 from Thousand Lights constituency as an Independent candidate and 1967 from Egmore constituency as a Dravida Munnetra Kazhagam candidate. He was also elected to Lok Sabha in 1977 from Chennai North constituency as a Dravida Munnetra Kazhagam candidate. Collectrate office building in Virudhunagar is named after him. He was a dialogue writer for a film Sarvadhikari made in 1951. [2]
எல்லா தொகுதியிலும் தி.மு.கழகம் தோற்ற அந்த தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டிலியே முதல் தேர்தல் நன்றி அறிவிப்புக்கூட்டம் கடலூர் நகர தி.மு.கழகம் சார்பில் நந்திவர்மன் தலைமையில் நடந்தது.
நன்னிலம் நடராசன் சிறப்புரை. கூட்ட ஏற்பாடு நகரச் செயலாளர் கி.கோவிந்தராஜன் [ கி.வீரமணி அவர்களின் அண்ணன் ]
TEN YEARS BEFORE IN NEYVELI N.NANDHIVARMAN HAD SPOKEN IN SAME STAGE WITH A.V.P.ASAITHAMBI.
Members of the Parliament[edit]
No comments:
Post a Comment