என் ஆருயிர் நண்பர்களில் ஒருவரான வழக்கறிஞர் சி,பி,திருநாவுக்கரசு ,முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர், ஐம்பதாண்டுகள் வழக்கறிஞர் ஆகப் பணி புரிந்துள்ளதை நினைவு கூறும் மலருக்கு கட்டுரை நான் தர வேண்டும். பழைய நாட்குறிப்புகளை புரட்டினேன். 1967 மார்ச் 25 அன்று புதுவை மண்ணில் என்றன் முதற்கூட்டம் , ஒதியஞ்சாலை திடலில் திரு.கே.என்.இராமச்சந்திரன் எம்.எ, எம்.எல்.எ அவர்களுடன் நானும் பேசினேன். என்றன் கல்லூரி இலச்சினை தமிழில் அமைய வேண்டும் என அவரிடம் எடுத்துரைத்தேன், அவர் பல்கலைகழக செனட் உறுப்பினர் என்பதால். புதுவை தென் பகுதி எம்.ஜி.ஆர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது. பெருந்திரளான மக்கள் கூட்டத்திடையே பேசுகையில் இந்தக் காட்சி கண்டு என் தெவ்வர் குழாம் எவ்வளவு தூரம் என்னுடன் மாறுபட்டமைக்கு கலுழும் என எண்ணிப் பார்த்தேன். புலவர் அறி.தென்னகன் அவர்கள் பாராட்டினார். வெற்றி பெற்ற பிறகு பேசுவது சற்று கடினமாகத்தான் உள்ளது. என்ற போதிலும் கையொலி பெறாமல் மேடையினின்று இறங்கா வண்ணம் சமாளிக்க முடிகிறது. தூய்மை மிக்க கொள்களைகளே எடுத்துக் கூறும் போது மட்டும் என்னுள் உந்தித் தள்ளும் அவாவனது மிகச் சிறப்பாக பேசச் செய்கிறது என்னுளம் கொள்கை மீது கொண்ட பிடிப்பால் என்று நாட்குறிப்பு பதிவு.
இதே கூட்டமே நண்பர் சி.பி.திருநாவுக்கரசுக்கும் புதுவை மண்ணில் முதல் கூட்டம்..
இதே கூட்டமே நண்பர் சி.பி.திருநாவுக்கரசுக்கும் புதுவை மண்ணில் முதல் கூட்டம்..
No comments:
Post a Comment