Sunday, May 30, 2010

முஜிபுர் ரகுமான் கொலையாளிகளுக்கு தூக்கு

- நந்திவர்மன்

மாநில சுயாட்சி! இந்தியாவில் மட்டுமல்ல! பாகிஸ்தானிலும் இக்கோரிக்கை எழுந்தது. 1968 ல் அதை எழுப்பியவர் வங்க தேசப்பிதாவாக பின்னாளில் மாறிய முஜிபுர் ரகுமான். 1970 ல் சென்னை அண்ணா நகர் : பொட்டல் வெளியாக இருந்தது. அண்ணா நகர் டவரைத் தவிர உயர்ந்த கட்டிடங்கள் இல்லைää ஆங்காங்கே சில வீடுகள் மட்டுமே! அப்போது அண்ணா நகரில் மாநில சுயாட்சி மாநாடு நடந்தது. பஞ்சாப் முதல்வர் குர்நாம் சிங் கலந்து கொண்டார். 1967 ல் மேற்கு வங்கத்தில் பங்களா காங்கிரஸ் முதல்வர் அஜய் முகர்ஜியின் தூதுவராக அக்கட்சி பிரதிநிதியாக வந்தவர் இன்றைய பிரணாப் முகர்ஜிää தமிழக முதல்வர் நடத்திய அந்த மாநாடு ஒரு பிரம்மாண்ட மாநாடு! அந்த காலத்தில் தமிழ்நாட்டின் சுவர்களில் தென்னாட்டு முஜிபுர் ரகுமான் என்று தமிழக முதல்வர் பெயரை எழுதுவார்கள். நெருக்கடி நிலையில் ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு இப்படி எழுதினார்கள். அந்த முஜிபுர் ரகுமான் வங்க தேசப் பிதா! அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றவர்களில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இவ்வளவு காலமும் கொலையாளிகள் நீதிமன்றத்தை இழுத்தடித்தார்கள். அண்மையில் தான் வங்கதேச சுப்ரீம் கோர்ட் 12 பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது.

இன்னமும் பிடிபடாத கொலையாளி அமெரிக்காவில் இருக்கிறான். திசம்பர் 2 2009 ல் தான் இண்டர்போல் நிறுவனத்தின் டாக்கா கிளை தன் அமெரிக்க அலுவலகத்துக்கு அவசர வேண்டுகோளை அனுப்பியது. வங்கத் தந்தை முஜிபுர் ரகுமான் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ர~Pத் சௌத்ரியை கை செய்து நாடு கடத்துமாறு கோரிக்கை இண்டர்போலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதே போல் கனடா நாடு நூர் சௌத்ரியின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தது. அபயம் தருமாறு கேட்ட அவர் கோரிக்கையை ஏற்க மறுத்தது. கனடாவில் இருந்து அந்த முன்னாள் ராணவ மேஜர் நீரஜ் சௌத்ரியை வங்க தேசத்துக்கு நாடு கடத்தியது.

30 ஆண்டுகளுக்க முன்னால் லண்டன் தப்பிச் சென்ற இவ்விரு ராணுவ அதிகாரிகளும் பகிரங்கமாகவே டெலிவி~னில் முஜிபுர் ரகுமான் படுகொலைக்கு தாங்கள் உதவியதாக மார்தட்டியவர்கள். இன்று முஜிபுர் ரகுமான் மகளும் யார் கடிதம் எழுதினாலும் பதில் கடிதம் போடும் பண்பும் கொண்ட N~க் அசினா பிரதமராக இருக்கிறார். 62 வயதான N~க் அசீனாவை அண்மையில் தான் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட நடுவர்கள் கொண்ட குழு இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை சார்பாக இந்திராகாந்தி அமைதிப் பரிசுக்கு தேர்வு செய்தது. அமைதிப் பரிசு பெறும் N~க் அசீனா உள்ளம் தந்தையை கொன்றவர்களுக்கு சனவரி 2010ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்பதாலும் அமைதி பெறுகிறது.

வங்கதேச விடுதலைக்கு வித்திட்டு 1971 ல் போர் புரிந்த முஜிபுர் ரகுமான் ஆகஸ்ட் 15 1975 ல் படுகொலை செய்யப்பட்டார். மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்தார் மார்ச் 17 1920 ல் பிறந்த முஜிபுர் ரகுமான். அவாமி லீக் கட்சியின் அனல்கக்கும் பேச்சாளராக மக்கள் மனங்களில் இடம் பிடித்தார். வங்காளிகள் ஒன்றுபட்ட பாகிஸ்தானில் உரிமையற்று கிடப்பது கண்டு பொங்கி எழுந்தார். அயூப்கானின் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார். கிழக்கு பாகிஸ்தான் என அந்நாளில் சொல்லப்பட்டது வங்கதேசம். அந்தப் பகுதிக்கு 6 அம்ச மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன் வைத்தார். இதைப் பிரிவினை வாதமாக பாகிஸ்தான் அரசு கருதியது. 1968 ல் இந்திய அரசுடன் கை கோர்த்துக் கொண்டு பிரிவினையை தூண்டுவதாக அவர் மீது பாக்கிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

1970 ல் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கிழக்கு பாகிஸ்தான் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது. ஆயினும் அவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அதிபர் யாகியா கானுடனும் பூட்டோவுடனும் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடியவே 26 மார்ச் 1971 ல் சுதந்திர வங்கதேசம் அமைப்பதாக முஜிபுர் ரகுமான் பிரகடனம் வெளியிட்டார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். ஒன்பது மாதங்கள் சிறை. வங்கதேசத்தில் உள்நாட்டுப் போர் மூண்டது. கொரில்லாப் போரை நடத்திய வங்கதேச விடுதலைப் போராளிகளுக்கு இந்தியா எல்லா உதவிகளையும் செய்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கும் முக்தி வாகினி என்ற பெயரில் இருந்த வங்க தேச விடுதலைப் போராளிகளுக்கும் அவர்களுடன் துணையாக நின்ற இந்திய ராணுவத்துக்கும் போர் உக்கிரமாக நடந்தது. போரின் முடிவில் வங்கதேசம் சுதந்திர நாடானது. இந்தியா உதவியுடன் இந்திய ராணுவமே வங்கதேச விடுதலைக்கு பின்னிருந்து இயக்கியது உலகமறிந்தது.

வங்கதேசம் சுதந்திர நாடானதும் பாக்கிஸ்தானில் சிறை பட்டிருந்த முஜிபுர் ரகமான் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார். வங்கதேசம் திரும்பி பிரதமரானார். பின்னர் குடியரசுத் தலைவருமானார். ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வந்தார். ஊழலும் நிர்வாகச் சீர்கேடுகளும் தலை விரி;த்தாடின. 1974 கடுமையான பஞ்சம் வங்க தேசத்தை ஆட்டிப் படைத்தது. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு ஆளாயின.

விடுதலைப் போரை முன்னின்று நடத்திய முக்தி வாகினி என்ற கொரில்லாப்படைத் தலைவர்களாக இருந்து பின்னாளில் ராணுவ மேஜர்களான சையத் பரூக் ரகுமான்ää அப்துர்; ர~Pத்ää ~ர்ஃபுல் N~க் தலிம் என்ற சதிகாரர்கள் அவரை கொல்லத் திட்டம் தீட்டினார்கள். 1975 ஆகஸ்ட் 15 அதிகாலை மூன்று பிரிவாக பிரிந்து முஜிபுர் ரகுமான் வீட்டின் மீது தாக்குதல் நடந்தது. வீட்டின் படிக்கட்டுகளிலேயே முஜிபுர் ரகுமான் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தார் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.

முஜிபுர் ரகுமானின் இரண்டு மகள்கள் ஜெர்மனியில் இருந்ததால் அன்று படுகொலை செய்யப்படாமல் தப்பித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர்தான் இன்று வங்கதேச பிரதமரான N~க் அசீனா!

2010 சனவரியில் படுகொலை செய்தவர்கள் தூக்கிலிடப்பட்ட உள்ளார்! அத்தோடு அந்த சகாப்தம் முடிந்தது! ஆனால் வங்கதேச விடுதலைக்கு முக்கிய காரணமானது பாக்கிஸ்தான் அரசின் மொழிக்கொள்கை. 1952 சனவரி 26ல் பாக்கிஸ்தானில் உருது மட்டுமே ஆட்சிமொழி சட்டம் வந்தது. அதை எதிர்த்து சிறையில் இருந்தே போராட்டத்தை துவக்கினார் முஜிபுர் ரகுமான். பிப்ரவரி 21 அன்று சிறைப்பட்ட தலைவர்களை விடுவிக்க கோரியும் வங்க மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க கோரியும் மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். டாக்கா நகரில் 144 தடையத்தரவு போடப்பட்டது. தடையை மீறிப் போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சு10டு நடத்தப்பட்டது. சலாம்ää பர்கத்ää ரபீக்ää ஜப்பார் ~பியூர் ஆகிய 5 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த 5 மாணவர்கள் கொல்லப்பட்ட நாளையே ஐக்கிய நாடுகள் மன்றம் யுனெஸ்கோ உலகத் தாய்மொழிகள் நாளாக ஒவ்வொராண்டும் கொண்டாடுகிறது! தமிழுக்கு தீக்குளித்தவர்களும் தமிழுக்காக உயிர் இழந்தவர்களும் பற்றிய தியாக வரலாறு ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு எடுத்துரைகக்கப்படாத காரணத்தால் நம் மொழிப் போராட்டம் உலக அங்கீகாரம் பெறாமல் போனது!

மொழி முதல் மாநில சுயாட்சி வரை தமிழகத்தோடு ஒப்புவமை காட்டக் கூடிய வங்கதேசத்தை அதன் பிதா முஜிபுர் ரகுமானை அன்று சுவர்களில் எழுதி நினைவூட்டியவர்கள் இன்று முற்றிலும் மறந்து விட்டார்களோ! அவர் கொலைக்க தாமதமாக கிடைத்த நீதி பற்றி பேசாமல் இருக்கிறார்களே!

 தனியாக : (துப்பாக்கியோடு வீதிகளில் செல்லும் இந்தப் பெண்கள் படையும் வில்லும் அம்பும் நாட்டுத்துப்பாக்கியும் கொண்ட விவசாயிகள் படையும் தான் பாக்கிஸ்தான் ராணுவத்தை முறியடித்து வங்க தேசத்தை வென்றார்கள் என்று நாம் நம்ப வேண்டும். இந்திய ராணுவம் மாறுவேடத்தில் இந்தப் போரை நடத்த வில்லை என்பதையும் நாம் நம்பவேண்டும்.

No comments:

AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...